Mayangum Dhasanai – மயங்கும் தாசனை

Deal Score0
Deal Score0

1.மயங்கும் தாசனை
நாதா, நீர் நடத்தும்;
என் பாதைகாட்டியாய்
சகாயம் புரியும்.

2.நீர் காட்டும் பாதைதான்
எப்போதும் நல்லதே;
சுற்று, நேர் ஆயினும்
விண் வீடு சேர்க்குமே.

3.என் சித்தம் ஆபத்தாம்,
உம் சித்தம் நாடுவேன்;
நான் செல்லும் பாதையை
நீர் காட்டக் கெஞ்சுவேன்.

4.நான் தேடும் ராஜியம்
உம் சொந்தமானதே;
அங்கென்னைச் சேர்த்திடும்
பாதையும் உம்மதே.

5.உம் சித்தம்போல நீர்
என் பாத்திரம் எடுத்தும்
சந்தோஷம், சஞ்சலம்,
ஏதாலும் நிரப்பும்.

6.வியாதி, சுகமோ,
இஷ்டர், பகைஞரோ,
வறுமை, செல்வமோ,
சிறிதோ, பெரிதோ.

7.என் இஷ்டம் எதிலும்
வேண்டாம்; என் நாதரே,
என் வழிகாட்டியாம்
நீர் சர்வ ஞானரே.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo