Minmini poochigal minnaladipadhum – மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும்
மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் ஏனோ இன்று ஏனோ
சிறு குழந்தை உருவில் தேவன் பிறந்ததினாலோ
தூதர்கள் பாடிடும் பாட்டிசையும் இதனாலோ விந்தை தானோ
1. பூமிக்கு வந்த தேவன் இன்று புல்லணை மெத்தையிலே
அன்னை மரி கரத்தில் ஒரு பிஞ்சி மலர்ந்திடவே
ஆடிடை மேய்ப்பர்கள் பார்த்திட தேடிடவே
வந்தது அற்புதமே இது தேவனின் அன்பதுவே
2 சொந்த மகனைத் தந்து தேவன் காட்டின அன்பினிலே
ஏழைகள் வாழ்திடவே புது நியாயங்கள் வந்ததுவே
ஞானிகள் உந்தனைத் தேடியே வந்தனரே
மன்னன் அரண்மனையில் உன்னைக் காணாமல் நின்றனரே
3 தாழ்மையைக் காட்டிடவே நீ வந்து பிறந்த இடம்
சோர்ந்திடும் நெஞ்சத்திலே நீ பொங்கிடும் இன்ப வெள்ளம்
அன்புடன் தேடிடும் யாவரும் கண்டிடவே
வந்து பிறந்ததுவே எங்கள் உள்ளம் மகிழ்ந்திடவே
Minmini poochigal minnaladipadhum yaeno indru yaeno
Siru kuzhandhai uruvil devan pirandhadhinaalo
Dhoodhargal paadidum paatisaiyum idhanaalo vindhai dhaano
1. Bhoomiku vandha devan indru pullanai methaiyilae
Annai mari karathil oru pinju malarndhidavae
Aadidai meipargal paarthida thedidavae
Vandhadhu arpudhamae idhu devanin anbadhuvae
2. Sondha maganai thandhu devan kaatina anbinilae
Yezhaigal vaazhndhidavae pudhu niyayangal vandhadhuvae
Gnanigal undhanai thediyae vandhanarae
Mannan aranmanaiyil unnai kaanaamal nindranarae
3. Thaazhmaiyai kaatidavae nee vandhu pirandha idam
Sordhidum nenjathilae nee pongidum inba vellam
Andudan thedidum yaavarum kandidavae
Vandhu pirandhadhuvae engal ullam magilndhidavae