Naam Niththirai Seithu Lyrics – நாம் நித்திரை செய்து
Naam Niththirai Seithu Lyrics – நாம் நித்திரை செய்து
1. நாம் நித்திரை செய்து விழித்தோம்
நற்சுகம் பலம் அடைந்தோம்
நாள்தோறும் தெய்வ அன்பையே
உணர்ந்து ஸ்துதி செய்வோமே.
2. தீங்கை விலக்கிப் பாவத்தை
மன்னித்து, மோட்ச நம்பிக்கை
மென்மேலும் ஓங்க நாதனார்
கடாட்சம் செய்து காக்கிறார்.
3. அன்றன்று வரும் வேலையை
நாம் செய்கின்ற பணிவிடை
என்றெண்ணியே, ஒவ்வொன்றையும்
படைப்போம் பலியாகவும்.
4. நம்மை வெறுத்து, கர்த்தரின்
சமீபம் சேர விரும்பின்,
அன்றாடக கடமையும்
ஓர் ஏதுவாக விளங்கும்.
5. ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்,
கர்த்தாவே, பலம் ஈந்திடும்;
உம்மண்டை நாங்கள் வாழவும்
தகுந்தோர் ஆக்கியருளும்.
Naam Niththirai Seithu Lyrics in English
1. Naam Niththirai Seithu Viliththom
Nar Sugam Balam Adainthom
Naal thorum Deiva Anbaiyae
Unarnthu Sthithi Seivomae
2.Theengai Vilakki Paavaththai
Manniththu Motcha Nambikkai
Menmealum Oonga Naathanaar
Kadatcham Seithu Kaakkiraar
3.Antrantu Varum Vealaiyai
Naam Seikintra Panividai
Entrenniyae Ovvontraiyum
Padaippom Paliyagavum
4.Nammai Veruththu Karththarin
Sabeepam Seara Virumbin
Antraada Kadamaiyum
Oor Yeathuvaaga Vilangum
5.Jebikkum Vannam Uyiyavum
Karththavae Balam Eenthidum
Ummandai Naangal Vaazhvum
Thagunthor Aakkiyarulum