NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics

Deal Score0
Deal Score0

நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் -2
அவரும் என் பக்கம் சாய்ந்து என் மன்றாட்டை கேட்டார்
நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்

அழிவின் குழியினின்று அவர் என்னை வெளிகொணர்ந்தர்
கற்பாறை மீதினிலே கால் ஊன்றி நிற்க செய்தார் -2
என் காலடிக்கு வலுதந்தாதார்
என்னை நிலையாக நிற்க செய்தார் -2
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்

அச்சம் கொண்டவர்கள் தினம் இறைவனை நம்பிடுவர்
அவரை நம்பிடுவோர் பல பேருகள் பெற்றிடுவர் -2
பல காரியங்கள் செய்திடுவார்
என்னை இமைப் போல காத்திடுவார் -2
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்

எனக்கென திட்டங்களை தினம் வகுப்பவர் ஆண்டவரே
பலியும் காணிக்கையும் விரும்பாத உன்னதரே -2
என் செவிகளையும் திறந்திடுவார்
அவர் சொல்வதெல்லாம் கேட்டிடுவேன் -2
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்
நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo