Naan Engae Ooduvean – நான் எங்கே ஓடுவேன்
1.நான் எங்கே ஓடுவேன்,
மா பாதகனானேன்,
தீட்பெங்கும் என்னை மூடும்,
யார் ஆத்ரிக்கக் கூடும்;
என் திகில் லோகத்தார்கள்
அனைவருடத நீக்கார்கள்.
2.அன்புள்ள, இயேசுவே,
வா என்று சொன்னீரே,
என் மனமும்மைப் பற்றும்;
என் க்லேகமும் இக்கட்டும்
தணிய, தயவாகத்
திடன் அளிப்பீராக.
3.என் பாவத்தால் உண்டாம்
விசாரத்தோ டெல்லாம்
நான் எனக்காய் மடிந்த
உம்மண்டையே பணிந்த
ஜெபத்தியானமாக
வந்தேன், ரட்சிப்பீராக.
4.சிந்துண்ட உம் வல்ல
இரத்தத்தால் எல்லா
அழுக்கும் என்னில் வாங்கும்,
என் நோயில் என்னைத்தாங்கும்;
கடலின் ஆழமட்டும்
என் பாவங்கள் விழட்டும்.
5.என் ஆறுதல் நீரே,
உம்மால் மீட்பாயிற்றே.
என் தீட்பெல்லாம் மறைய,
நீர் அதை உம்முடைய
குழியிலே அடைத்தீர்,
அங்கே அதைப் புதைத்தீர்
6.என் குற்றம் பெரிது,
ஆனாலும் உமது
இரத்தமும் பலியும்
பலிப்பதால் கழியும்.
உம்மண்டை வந்து சேரும்
எல்லாரின் நெஞ்சுந் தேறும்.
7.அநேகம் எனக்குக்
குறைந்தும், உமது
இரத்தத்தாலே நீரே
8.எல்லாப் பேய்க் கூட்டமும்
எதிர்ப் போராடியும்,
நான் ஏன் இளக்கரிப்பேன்,
உம்மால் அதை ஜெயிப்பேன்,
என் மீட்பர் பேர் விளங்கும்
போதே எல்லாம் அடங்கும்.
9.ஸ்வாமி, நீர் சிந்தின
இரத்தம் சருவ
உலகையும் ரட்சித்து,
பேய் வாய்க்குந் தப்புவித்து,
எக்கேட்டையுந் தடுக்கும்
10.இப்போதும் உம்மையே
நான் சார்ந்தேன், இயேசுவே,
துக்கித்தும்மண்டை வந்தேன்,
உம்மால் மன்னிப்பைக்கண்டேன்
நான் நரகத்தைக்காணேன்
நான் ஜீவனுக்குள்ளானேன்.
11.இனி நான் உம்மிலே
பிரிதலின்றியே
நிலைத்து வளர்ந்தேற.
அவயவமாய்த் தேற,
நீர் என்னைச் சாவுமட்டும்
நல்லாவியால் நடத்தும்.