Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில்
1. நல் மீட்பரே இந்நேரத்தில்
வந்தாசீர்வாதம் கூறுமேன்
உம் வார்த்தை கேட்டோர் மனதில்
பேரன்பின் அனல் மூட்டுமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே, பிரகாசியும்.
2. இன்றெங்கள் செய்கை யாவையும்
தயாபரா, நீர் நோக்கினீர்
எல்லாரின் பாவம் தவறும்
மா அற்பச் சீரும் அறிந்தீர்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்.
3. எப்பாவத் தீங்கிலிருந்தும்
விமோசனத்தைத் தாருமேன்
உள்ளான சமாதானமும்
சுத்தாங்கமும் உண்டாக்குமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே, பிரகாசியும்.
4. சந்தோஷம் பயபக்தியும்
நீர் நிறைவாக ஈயுமேன்
உமக்கொப்பாக ஆசிக்கும்
தூய்மையாம் உள்ளம் தாருமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே, பிரகாசியும்
5. தரித்திரம் துன்பும் பாவத்தால்
இக்கட்டடைந்த யாரையும்
கண்ணோக்கும் மா கிருபையால்
நீர் மீட்பர், நீர் சமஸ்தமும்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே, பிரகாசியும்.