Nalla Devan neer – நல்ல தேவன் நீர் song lyrics
நல்ல தேவன் நீர் என்றும்
நல்ல தேவன் நீர் (2)
உம்மை பாடி போற்றுவேன் செய்த
எல்லா நன்மைக்காய் (2)
நல்லவரே வல்லவரே என்றும்
நன்மைகள் செய்பரே (2) – நல்ல தேவன்
தாழ்விலே இருந்த என்னை தூக்கி எடுத்து
பாவங்கள் பாராமல் அணைத்துக்கொண்டீர் (2)
தூய இரத்தத்தால் என்னை கழுவி
உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே (2) – நல்ல தேவன்
உம்மாலே எல்லாம் கூடும் என்றீரே
கூடாததொன்றும் இல்லையே (2)
ஒன்றும் இல்லாமையில் எல்லாமே தந்து நிறைவாய்
என்னை வாழ வைத்தீர் (2)- நல்ல தேவன்