Nalliravil Venpaniyil – நள்ளிரவில் வெண்பனியில்
Lyrics
நள்ளிரவில் வெண்பனியில் உதிக்கும் ஒரு வெண்ணிலவே
பொன் விழியை பூவிதழை உலகம் மறந்து பார்த்திருப்பேன்
எனக்கெனவே பிறந்தவனே இதயம் வரை நுழைந்தவனே
உன்னை அள்ளி நெஞ்சில் வைத்து ஆரீ ராரோ என்றே சொல்ல
– நள்ளிரவில்
கின்னம் இங்கே கீனம் ஆகும் கனகனின் விழியசைவில்
கணமில்லா விழியசவில்
சோனை கண்ட பண்ணை போல செழித்திடும் எந்தன் உள்ளம் செழித்திடுமே
உன் மோரை கண்டதினாலோ எந்தன்
மோறை இளகுவதேனோ
வள்ளல் உன்னால் அல்லல் துள்ளி ஓடிடுதே
உரவன் உறவில் உருவை உறுக்கி போய்விடுமோ
– நள்ளிரவில்
மல்லன் உந்தன் மல்லல் கண்டு மயங்கிடும் மாரன் உள்ளம் – மயங்கிடும் மாறன் உள்ளம்
மன்னன் மாணம் மாணலினால் மாணவம் சூடிடுதே – சூடிடுதே
தேரார் யாவர்க்கும் நீயோ மேழம் என்றும் ஆனதும் ஏனோ
செண்ணம் கொண்ட தன்னம் நீ தானோ
அழியின் மடியில் அழியா அளியும் தோன்றிடுதோ
– நள்ளிரவில்
Nalliravil Venpaniyil | Tamil Christmas Song | Anuradha Sriram