Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்
நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்
நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் -2
அவர் அதிசயமே
ஆலோசனை கர்த்தர்
சர்வ வல்லவரே
நித்திய பிதா
சமாதான பிரபு அவரே.
யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்
மாட்டு தொழுவத்திலே
ராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்து
ஏழ்மையின் கோலமெடுத்து
பாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிட
நோய்களை தீர்த்து மீட்டிட
நம்மை படைத்தவர் நம் ரட்சகர்
மன்னவன் பிறந்தாரே- அவர் அதிசயமே
இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்
வெளிச்சம் தந்திடவே
ஆதியும் வார்த்தையுமான தேவன்
உலகத்தில் வந்தாரே
அன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்
நம் உள்ளத்தில் வந்திடுவார்
நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்
என்றும் மாறிடா நேசர் இயேசு-அவர் அதிசயமே