Nambikkaiyin Kaaranar Neerae – என் நம்பிக்கையின் காரணர் நீரே song lyrics
Nambikkaiyin Kaaranar Neerae – என் நம்பிக்கையின் காரணர் நீரே song lyrics
என் நம்பிக்கையின் காரணர் நீரே
என் வாழ்வின் அர்த்தம் நீரே
என்னை ஆளுகை செய்பவர் நீரே
உம்மை புகழ்ந்து பாடிடுவேனே-2
உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
ஆயுள் வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன்-2
-என் நம்பிக்கையின்
முதலும் நீரே முடிவும் நீரே
துவங்கியதை முடிப்பவர் நீரே-2
கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே-2
-உம்மை ஆராதிப்பேன்
சொன்னதை செய்யும் உன்னதர் நீரே
வாக்கு மாறா உத்தமர் நீரே-2
கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவி கொடுப்பவரும் நீரே-2
-உம்மை ஆராதிப்பேன்