Nanmai Yennunjseiya – நன்மையேனுஞ்செயத்
நன்மையேனுஞ்செயத் திறனிலேன்
1. ஜென்மமார் கருவிலே வினைவிடம் தீண்டலால்
நன்மனோ தத்துவ நாசமா யினவெலாந்
தின்மையே செயவருந் திறனுளேன் சிறியவோர்
நன்மையே னுஞ்செயத் திறனிலேன் நவையினேன்
2. நான்பிறந் ததுமுயிர்ச் சுமையினா னலியவோ
கான்பிறங் கலினுறுங் கதழ்விடப் பாந்தளில்
ஊன்பிறங் குடல்வளர்த் துழலுவேன் உணர்விலேன்
ஏன்பிறந் தேன்கொலாம் ஏழையிவ்வுலகினே?
3. அன்னையாய் அப்பனாய் அன்றுதொட் டின்றுமட்டு
என்னையாய் பொடுபுரன் தென்றுநன் றேதரும்
தன்னையே நிகர்வதோர் தம்பிரான் தயைமறந்து
என்னையே முப்பகைக் கீடழித் தினைகுவேன்
4. ஓரணுத் துணையுநல் லுணர்விலேன் உலகுசெய்
கோரணிக் குளமுடைந் திடையுமோர் கோழையான்
ஆரணத் துரைபடிந் தயர்வுயிர்த் திலனினி
மாரணக் கடல் குளித் தயர்வனோ மதியிலேன்?
5. எப்பெரும் பதகரும் இதயநொந் தேங்கிவந்து
அப்பனே பிழைபொறுத் தருளு மென் றடையிலோர்
ஒப்பரும் புதல்வனுக் குருகிமன் னிப்பமென்று
இப்பெருஞ் சுருதிதந் திறைமறந் திடுவரோ?