Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே
நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயே.
1.அன்றதம் செய்தபாவம் பொன்று நிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே நன்றி
2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே நன்றி
3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே நன்றி
4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே நன்றி
5.உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக நன்றி
6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக நன்றி