Narambu Kooda Yesuvuku நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி
நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது
என் எலும்பு கூட இயேசுவுக்காய் நிமிர்ந்து நிற்குது
வயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது
என் உயிரே இயேசுவே என்று சொல்லுது
கண்ணீரோடு கண்கள் அவரை நோக்கிப் பார்க்குது
என்றும் நன்மை செய்த நல்லவர்க்கு நன்றி சொல்லுது
என் முழங்கால்கள் மண்டியிட்டு தினமும் ஜெபிக்குது
என் கண்ணீர் ஜெபம் தேவன் கேட்பார் தேவன் நம்புது
என் ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது
தினம் நேர்த்தியாக ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுது
என் இருதயமோ இரவும் பகலும் விழித்திருக்குது
என் உறவே என் மறைவிடமே என்று சொல்லுது
ஜீவன் தந்த தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
என் ஆவி ஆத்மா சரீரம் முழுதும் அர்ப்பணிக்கிறேன்
இலக்கை நோக்கி ஜீவ பயணம் தொடர்ந்து ஓடுவேன்
பரிசுத்தமாய் வாழ்ந்து தேவ ஊழியம் செய்வேன்
கோடி கோடி நன்மை சொல்லி பாடுவேன்
எனக்கு நன்மை செய்த தேவனையே போற்றி பாடுவேன்
கோடி கோடி ஸ்தோத்திரங்கள் சொல்லி பாடுவேன்
எனக்கு நன்மை செய்த தேவனையே போற்றி பாடுவேன்