Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து
1. நீரழைக்க நானெழுந்து
வாணாளெல்லாம் பின் செல்வேன்
பாதை யெல்லாம் நீரறிவீர்
நடத்துவீர் உம்மண்டை;
உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும்
அந்தம் வரை பின் செல்வேன்
இரட்சகா நீர் எந்தன் சொந்தம்
நேசர் நண்பர் அன்பர் நீர்
2. பின் செல்வேன் அந்தன் போல நான்
முன் செல்வீர் கிறிஸ்துவே
தடைகள் நான் எண்ணி நிற்க
திறப்பீர் நீர் வாசலை – உம் சொந்தம்
3. தோல்வியில் புன்னகை கொள்ள
துணை செய்து மகிழ்விப்பீர்;
மாராவில் நான் குடிக்கையில்
ருசிகர மாக்குவீர் – உம் சொந்தம்
4. முத்திரிப்பும் வெளிப்பாடும்
உமதே என் ஆண்டவா!
தாறேன் என் ஆன்மா உடலும்
எனதல்ல உமதே – உம் சொந்தம்