Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய்
1. நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், கர்த்தரே;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
2. ஆ! என் குரூர பாவத்தால்
மிகுந்த துக்கம் அடைந்தேன்’
ஆ ஸ்வாமி, துயரத்தினால்
நிறைந்த ஏழை அடியேன்,
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
செய்யாமல் தயவாய் இரும்;
பிதாவே, என்னைப் பிள்ளையாய்
இரங்கி நோக்கியருளும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.
4. என் நெஞ்சின் திகில் தணித்து,
என் மேல் இரங்கி ரட்சியும்;
திவ்விய சந்தோஷம் அளித்து
எப்போதும் கூடவே இரும்;
இரங்குமேன், இரங்குமேன்,
என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்