Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே
1. நித்தியானந்த ஜீவ ஊற்றே!
உந்தன் துதியைப் பாடுவோம்
இவ்வருடப் பிறப்பிலே
இவ் வல்லேலூயா சத்தமே!
பல்லவி
பாடுவேன் நான் இக்கீதத்தை
இக்கீதத்தை இக்கீதத்தை,
பாடுவேன் நான் இக்கீதத்தை
இயேசு செய்வதெல்லாம் நன்மை!
2. சென்ற நாள் நீர் எம் பதவி
இக்கட்டுத் தீங்கில் உதவி
நாம் பெற்ற எல்லா நன்மைக்கே
அடியார் உள்ளம் பாடுதே! – பாடுவேன்
3. யுத்தத்தில் நீரே முன் சென்று
ஜெயித்தீர் எம்மண்டை நின்று;
நன்றியறிதலுடனே,
என் உள்ளம் உம்மைப் போற்றுதே! – பாடுவேன்
4. இப்போ நின் பாதம் பணிந்து
நான் நவ பலியாய்த் தந்து;
வருங்கால யுத்தத்திலே
அருள் தா, கீதம் பாடவே! – பாடுவேன்