Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே
1. ஓ, எருசலேமியாரே
விழியுங்கள் மெய்மார்க்கத்தாரே
இப்பாதி ராத்திரியிலே
பர்த்தா வாறார்; வேகமாக
எழுந்திருங்கள் புத்தியாக
இருக்கும் கன்னிகள் எங்கே?
தீவர்த்திகளையே
எடுத்தெதிர்கொண்டே
போம் நேரமாம்,
என்றிரவில் அலங்கத்தில்
நிற்பாரின் கூக்குரல் உண்டாம்.
2. சீயோனாகிய மனைவி
சந்தோஷம் மனதில் பரவி
விழித்தெழுந்திருக்கிறாள்
அவள் நேசர் மேன்மையோடும்
சிநேகத்தோடும் தயவோடும்
வெளிப்படுகிறதினால்
கிலேசம் நீங்கிற்று;
ஆ ஸ்வாமீ, உமக்கு
ஓசியன்னா!
அடியாரும் கம்பீரிக்கும்
கதிக்குச் செல்வோமே, கர்த்தா.
3. சுரமண்டலங்களாலும்,
நரர் சுரர்கள் நாவினாலும்,
துதிக்கப்பட்டோர் தேவரீர்
மோட்சலோகம் மா சிறப்பு
நீர் எங்களை வானோர்களுக்கு
ஒப்பானோராக மாற்றுவீர்
அவ்வாழ்வைக் கண்டோர் ஆர்?
காதாலே கேட்டோர் ஆர்?
நாங்கள் மகா
சந்தோஷமும் மகிழ்ச்சியும்
அடைகிறோம்; அல்லேலூயா!