Oh -Siru nagar bethlehem – ஓ சிறு நகர் பெத்லகேம்
1. ஓ! சிறு நகர் பெத்லகேம்
உன் அமைதி என்னே!
ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில்
விண்மீன்கள் மறையும்;
நின் இருண்ட வீதிகளில்
நித்திய ஒளி வீசும்;
பல்லாண்டின் பயம் நம்பிக்கை,
பூர்த்தி நின்னிலின்று
2. ஓ! காலை வெள்ளிகள் கூறீர்
விசுத்த ஜென்மத்தை;
துதிகள் பாடீர் தேவர்க்கே;
பாரில் சமாதானம்!
மரியாளிடம் பிறந்தார்
கிறிஸ்து இரட்சகர்!
மக்களுறங்க தூதர்கள்
தேவன்பை வியந்தார்
3. இவ்வற்புத ஈவை யீந்தார்
அமைதியாகவே!
தேவன் மனிதருள்ளத்தில்
வானாசி பகர்ந்தார்
அவர் வருகை அறியார்
சாந்த மற்றோர் யாரும்;
பணி வுள்ளோரிடம் கிறிஸ்து
வந்து வசிப்பாரே!
4. ஓ! பெத்லகேமின் பாலனே!
இறங்கும் எம்மண்டை,
பாவம் போக்கி எம்மில் வந்து,
ஜென்மித்திடும் இன்றே;
தூதர் இம்மா நற்செய்தியை,
கூறயாம் கேட்கிறோம்;
ஓ! எம்மிடம் தங்க வாரும்
கர்த்தா, இம்மானுவேல்!