Oh Sthiri viththesayah- ஓ ஸ்திரி வித் தேசையா

Deal Score0
Deal Score0

ஓ ஸ்திரி வித் தேசையா
அன்பு கூராய் துன்பம் தீராயோ

அனுபல்லவி

வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா
வந்தெமை க்ருபைக் கண் பாராயோ

சரணங்கள்

1.ஆதி மானிடர் புரிந்த பாததம் தொலைக்க வந்த
அண்ணலே உமக் கபயமே
ஓ ஸ்திரி வித்தேசையா
ஆதரித் திரங்க வேண்டுமே – ஓ

2.எத்தனை மனக்கிலேசம், நித்தமும் சத்துருக்கள் மோசம்
எந்தையே கைவிட்டு விடாதேயும்
ஓ ஸ்திரி வித்தேசையா
எப்படியும் காத்தருள் மெய்யா – ஓ

3.ஆடுகள் சிதறிப்போச்சோ அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ
பாடுபட்ட பட்சக் கோனாரே
ஓ ஸ்திரி வித்தேசையா
காடுகளில் தேடிப் பாருமேன் – ஓ

4.மந்தையைக் க்ருபை கண்பாரும் சிந்தையில் துயரம் தீரும்
சந்ததம் தொழுவம் சேருமேன்
ஓ ஸ்திரி வித்தேசையா
வந்தனம் உமக்கு ஸ்தோத்திரமே – ஓ

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo