ONTRUMILLAI NAAN – ஒன்றுமில்லை நான்
ஒன்றுமில்லை நான் (2)
அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான்
சரணங்கள்
1. பல பல பாஷை படித்தறிந்தாலும்
கல கல வென்னும் கை மணியாமே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று
2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்
கண் காணா தேவனில் அன்பு கூருவானோ
விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று
3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து
சகலத்தையும் விசுவாசித்து நம்பி
சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று