Oor Murai vittu – ஓர் முறை விட்டு
ஓர் முறை விட்டு மும்முறை
சீமோன் மறுத்தும் ஆண்டவர்
என்னிலே அன்புண்டோ என்றே
உயர்த்த பின் கேட்டனர்
விஸ்வாசமின்றிக் கர்த்தரை
பன்முறை நாமும் மறுத்தோம்
பயத்தினால் பலமுறை
நம் நேசரை விட்டோம்
சீமோனோ சேவல் கூவுங்கால்
மனம் கசந்து அழுதான்
பாறைபோல் நின்று பாசத்தால்
கர்த்தாவைச் சேவித்தான்
அவன்போல் அச்சங்கொள்ளினும்
நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்
பாவத்தால் வெட்கம் அடைந்தும்
கண்ணீர் சொரிந்திலோம்
நாங்களும் உம்மை விட்டோமே
பன்முறை மறுதலித்தும்
நீர் எம்மைப் பார்த்து, இயேசுவே
நெஞ்சுருகச் செய்யும்
இடறும் வேளை தாங்கிடும்
உம்மைச் சேவிக்கும் கைகளும்
உம்மை நேசிக்கும் நெஞ்சமும்
அடியார்க்கருளும்