ஓர் ஏழை வீட்டில் நான் -Oor Yealai Veettil Naan
1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!
அங்கே மா இன்பம் நான் கண்டேன்
தரித்திரர் ஆனாலும்
சொன்னாள் அங்குள்ள விதவை;
என்னின்பத்திற்கு உதவி
இயேசு எனதெல்லாம்
பல்லவி
இயேசுவே எனதெல்லாம்
ஆம்! இயேசுவே எல்லாம்
2. இரட்சிப்பை மற்றோர்க்குச் சொல்ல
துன்பப் பாதையில் தாம் செல்ல
தத்தம் செய்தோர் எல்லாம்
தாகம் பசி சுவை யில்லை
என்றார் எம் இன்பக் கன்மலை
இயேசு எனதெல்லாம் – இயேசுவே
3. மூர்க்கர் வெறியர் மத்தியில்
மீட்பரின் நேசம் சொல்கையில்
பட்ட துன்பம் பார்த்தோம்!
ஆனால் அவர்கள் வதைகள்
மா இன்பமாய்ச் சகித்தார்கள்
அவர்க் கேசு எல்லாம் – இயேசுவே
4. மரண நதி நெருங்கி
நோய்கள் வந்தாலும் நடுங்கி
திகைக்காமல் செல்வோம்!
எங்கள் யுத்தம் முடிந்தது
சஞ்சல நாள் முடிந்தது
ஆமென் இயேசு எல்லாம்! – இயேசுவே