Orey pirana naathar undu – ஒரே பிராண நாதர்தான் உண்டு
பல்லவி
ஒரே பிராண நாதர்தான் உண்டு!
பூலோகத் தாரே
சரணங்கள்
1. இந்தப் பிராணநாதர் நம்பும்
இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம்!
மற்றும் வேறே நாமங்களால்
சற்றும் சுகப்பட்டீர்களோ? – ஒரே
2. பாவிகள் ஈடேறி மோட்ச
பாக்கியம் பெறுவதற்காய்
ஜீவன் விட்டுயிர்த் தெழுந்து
விண்ணுலகுக் கேறிச் சென்ற! – ஒரே
3. பற்பலர் பலவிதமாய்
கற்பிக்கும் பிரமாணங்களை
கேட்டுக்கேட்டு நெஞ்சு நொந்து
கேடற வகை பார்ப்போரே – ஒரே
4. என்னைப் பாவச் சேற்றினின்று
அன்பதாகக் கரை தூக்கி
துன்பம் தாங்க அருள் தரும்
நண்பனான நாயனிவர்! – ஒரே
5. இத்தனை நாளாக வீணாய்
தத்திக் குத்தித் தடுமாறி
சத்திய நெறியை விட்டு
புத்தியில் மயங்கினோரே! – ஒரே
6. தாமதித்து நீ நில்லாதே
சா மதித்துனை விடுமோ?
பாவத்தை யுணர்ந்து இயேசு
பாதத்தை இப்போதே தேடு! – ஒரே