Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில்
Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில்
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
தருவயோ என் தலைவா
அந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும்
அறியாயோ என் இறைவா
ஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
வருவயோ என் தலைவா
அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதும் நியாயமென்ன-2
தொழுதுன்னை வணங்கி கவலைகள் கூற
சுமைகள் கரைந்திடும் மாயமென்ன
மாயமென்ன மாயமென்ன மாயமென்ன
ஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
தருவயோ என் தலைவா
சோதர மானிடர் அழுகுரல் கேட்டால்
கேள்விகள் நிறைவது ஏன் இறைவா-2
வேதனை கண்டும் நீ காத்திடும் மெளனம்
விளங்கவில்லை அது ஏன் இறைவா
ஏன் இறைவா ஏன் இறைவா ஏன் இறைவா
ஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
வருவயோ என் தலைவா
ஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
வருவயோ என் தலைவா
அந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும்
அறியாயோ என் இறைவா
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
வருவயோ என் தலைவா