ORU THAAI POL – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Song Lyrics
ஒரு தாய் போல் என்னைத் தேற்றும்
என் நேசர் நீரன்றோ
தந்தை போல என்னைத் தாங்கும்
என் இயேசு நீரன்றோ
ஒருபோதும் மறவாத
என் அன்பர் நீரன்றோ
ஒரு நாளும் விலகாத
என் நண்பர் நீரன்றோ
என் எல்லாம் நீரன்றோ
உம் செல்லம் நானன்றோ
– ஒரு தாய் போல்
1. நாதி இன்றி நானிருந்தேன்
தேடி வந்தவர் நீரன்றோ
நாற்றமான வாழ்க்கை வாழ்ந்தேன்
கழுவி அணைத்தவர் நீரன்றோ
நான் உன் தகப்பன் மகனே என்று
முத்தமிட்டவர் நீரன்றோ
நான் உன் தகப்பன் மகளே என்று
முத்தமிட்டவர் நீரன்றோ
என் எல்லாம் நீரன்றோ
உம் செல்லம் நானன்றோ
– ஒரு தாய் போல்
2. கதறி அழுத நேரமெல்லாம்
கண்ணீர் துடைத்தவர் நீரன்றோ
கலங்கி நின்ற வேளைகளில் என்
கரத்தைப் பிடித்தவர் நீரன்றோ
கலங்கிடாதே மகனே என்று
அணைத்துக் கொண்டவர் நீரன்றோ
கலங்கிடாதே மகளே என்று
அணைத்துக் கொண்டவர் நீரன்றோ
என் எல்லாம் நீரன்றோ
உம் செல்லம் நானன்றோ
– ஒரு தாய் போல்
3. சோதனையில் நான் விழுந்தபோது
தூக்கிவிட்டவர் நீரன்றோ
சோர்ந்து போய் நான் கிடந்தபோது
தட்டிக் கொடுத்தவர் நீரன்றோ
சோர்ந்திடாதே மகனே உன்னுடன்
இருப்பேன் என்றவர் நீரன்றோ
சோர்ந்திடாதே மகளே உன்னுடன்
இருப்பேன் என்றவர் நீரன்றோ
என் எல்லாம் நீரன்றோ
உம் செல்லம் நானன்றோ
– ஒரு தாய் போல்
Oru Thaai Pol Ennai Thetrum
En Nesar Neerandro
Thanthai Pola Ennai Thaangum
En Yesu Neerandro
Oru Pothum Maravaatha
En Anbar Neerandro
Oru Naalum Vilakaatha
En Nanbar Neerandro
En Ellam Neerandro
Um Chellam Naanandro
– Oru Thaai Pol
1. Naathi Indri Naanirunthen
Thedi Vanthavar Neerandro
Naatramaana Valkai Valnthen
Kaluvi Anaithavar Neerandro
Naan Un Thahappan Mahane Endru
Muthamittavar Neerandro
Naan Un Thahappan Mahale Endru
Muthamittavar Neerandro
En Ellam Neerandro
Um Chellam Naanandro
– Oru Thaai Pol
2. Kathari Alutha Neramellam
Kaneer Thudaithavar Neerandro
Kalangi Nindra Velaikalil En
Karathai Pidithavar Neerandro
Kalangidaathe Mahane Endru
Anaithu Kondavar Neerandro
Kalangidaathe Mahale Endru
Anaithu Kondavar Neerandro
En Ellam Neerandro
Um Chellam Naanandro
– Oru Thaai Pol
3. Sothaniyil Naan Vilunthapothu
Thookivittavar Neerandro
Sornthu Poi Naan Kidanthapothu
Thatti Koduthavar Neerandro
Sornthidathe Mahane Unnudan
Iruppen Endravar Neerandro
Sornthidathe Mahale Unnudan
Iruppen Endravar Neerandro
En Ellam Neerandro
Um Chellam Naanandro
– Oru Thaai Pol