Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics

Deal Score0
Deal Score0

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை
பாரெங்கும் சொல்லிட புறப்படு
பாழான ஸ்தலங்கள் யாவையும்
ராஜாவின் அரண்மனையாக்கிடு! – (2)
எழும்பிடு வாலிபனே!
எழும்பிடு கன்னிகையே! – (2)
தேசத்தை கலக்கிடும் காலமிது
அக்கினியாய் எழும்பிடும் நேரமிது – (2)

1) இருண்ட உலகினை வெளிச்சமாக்கிட
அக்கினியாக புறப்படு
பாவ சாபங்கள் யாவும் நீக்கிட
வல்லமையாக எழும்பிடு – (2)
வல்லமை உனக்குள்ளே
தேவ அக்கினி உனக்குள்ளே – (2)
எழும்பிடு எழும்பிடு வாலிபனே
தேவ சேனை உன்னை அழைக்கிறது!
எழும்பிடு எழும்பிடு கன்னிகையே
தேவ சேனை உன்னை அழைக்கிறது! – பார் போற்றும்

2) காடுமேடுகள் சிதறி அலைந்திடும்
மாந்தரை மீட்டிட புறப்படு
கர்த்தர் இயேசுவின் அன்பை சொல்லிட
இரத்த சாட்சியாய் எழும்பிடு – (2)
வல்லமை உனக்குள்ளே
தேவ அக்கினி உனக்குள்ளே – (2)
எழும்பிடு எழும்பிடு வாலிபனே
தேவ சேனை உன்னை அழைக்கிறது!
எழும்பிடு எழும்பிடு கன்னிகையே
தேவ சேனை உன்னை அழைக்கிறது! – பார் போற்றும்

3) அகிலம் எங்கிலும் ஆண்டவர் இயேசுவின்
நாமம் உயர்த்திட புறப்படு
ஆதி எழுப்புதல் தேசம் (சபைகள்) கண்டிட
தரிசனத்தோடே எழும்பிடு – (2)
வல்லமை உனக்குள்ளே
தேவ அக்கினி உனக்குள்ளே – (2)
எழும்பிடு எழும்பிடு வாலிபனே தேவ சேனை உன்னை அழைக்கிறது!
எழும்பிடு எழும்பிடு கன்னிகையே
தேவ சேனை உன்னை அழைக்கிறது! – பார் போற்றும்

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை
பாரெங்கும் சொல்லிட புறப்படுவோம்
பாழான ஸ்தலங்கள் யாவையும்
ராஜாவின் அரண்மனையாக்கிடுவோம்! – (2)
எழும்புவோம் திருச்சபையே
செல்லுவோம் சேனைகளாய் -(2)
தேசத்தை கலக்கிடும் காலமிது
அக்கினியாய் எழும்பிடும் நேரமிது – (2) – பார் போற்றும்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo