Paavikalae NesaMeetpar – பாவிகளே நேசமீட்பர்
1. பாவிகளே நேசமீட்பர்
பாவப்பாரம் சுமந்தார்
மீட்பர் உன்னை ஏற்றுக்கொள்வார்
அவரண்டை வாராயோ?
பல்லவி
மீட்பர் தனை இப்போ நம்பு
மரித்தோரே உனக்காய்!
அழைப்புக்குக் கீழ்ப்படிந்து
பாவியே நீ வந்திடு
2. மீட்பரண்டை வந்தாலுன்னை
நேசமாக ஏற்பாரே!
நம்பிக்கையாய் தந்தால் உன்னை
சாகுமட்டும் காப்பாரே! – மீட்பர்
3. அழைப்புக்குச் செவிகொடு
கிருபையின் நாளிதே!
ஜீவ நதி பாய்ந்தோடுது
மீட்பர் காயத்திருந்தே – மீட்பர்