Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே

Deal Score0
Deal Score0

பல்லவி

பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே,
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.

சரணங்கள்

1. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தோரே,
பரனருளால் ஜெயமடைந்தீரே,
துஜம்[1] பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே,
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. – பஜி

2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவேமே.
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே,
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. – பஜி

3. திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்.
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். – பஜி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo