Paralogil Vaasam Seiyum – பரலோகில் வாசம் செய்யும்
ஆஹா ஹ ஹா….
ஹ்ம் ம் ம் ம்……(2)
பரலோகில் வாசம் செய்யும்
பரலோகில் வாசம் செய்யும்
பரிசுத்த தெய்வம் நீரே
பணிகின்றோம் தொழுகின்றோம்
பாதம் அமர்கின்றோம் (2)
மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமா போல் (2)
என் உள்ளமும் என் ஆத்மாவும்
உம்மைத் தான் வாஞ்சிக்குதே (2) – பரலோகில்
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் பரிசுத்தரே (2)
பாரெங்கிலும் உமையன்றியே பரிசுத்தர் வேறில்லையே (2) – பரலோகில்
என் நேசரே என் அழகே
என் நினைவெல்லாம் நிறைந்தவரே (2)
தேடி வந்தேன் உம் சமூகமதை
உம்மை தரிசிக்கவே
தேடி வந்தேன் உம் சமூகமதை
உமை தினம் தரிசிக்கவே
துதிகளில் வாசம் செய்யும்
துதிகளில் வாசம் செய்யும்
தூயாதி தூயர் நீரே
துதிக்கின்றோம் தொழுகின்றோம்
துதித்து மகிழ்கின்றோம் (2)