Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics
1. பரதேசியாக நாம் வாழும் உலகில்
சொந்தமென்று ஒன்றும் இல்லையே
நிலையானதொன்றும் இப்பூவில் இல்லை
அந்நியராய் செல்வோம்
கூடாரவாசிகள் நாம் – இங்கே கூடாரவாசிகள் நாம்
நித்திய நகரம் நோக்கியே செல்லும்
நித்தியவாசிகள் நாம் – அங்கே நிரந்தரவாசிகள் நாம்
2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்
நம்மோடு வருவதில்லை
நம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்
நம்மை விட்டு ஓடிவிடும்
– கூடாரவாசிகள் நாம் – இங்கே
3. இளமையும் மாயை அழகும் மாயை
பெயர் புகழும் மாயை
அனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்
இயேசுவை பின் தொடர்வோம்
– கூடாரவாசிகள் நாம் – இங்கே
4. நித்திய வீட்டின் அன்பான அழைப்பு
வரும்வேளை நாம் அறியோம்
பரலோக சிந்தை என்றும் மாறாமல்
பாடியே பயணம் செய்வோம்
– கூடாரவாசிகள் நாம் – இங்கே
5. மாறாத தெய்வம் மறையாத தெய்வம்
இயேசுவை கண்முன் வைப்போம்
மறுகரை சேரும் நாள் வரும் வரையில்
மங்காமல் ஜொலித்திடுவோம்