Pithavae Dekam Aavi Yaaum – பிதாவே தேகம் ஆவி யாவும்
1. பிதாவே, தேகம் ஆவி யாவும்
உம்மால் அல்லோ உண்டாயிற்று;
சரீர ஈவாம் ஊணுந் தாவும்,
நீர் என்னை மோட்ச வாழ்வுக்கு
தெரிந்துகொண்ட அன்புமே
மா உபகாரம், கர்த்தரே.
2. இயேசு ஸ்வாமி, நீர் அன்பாலே
கொடும் பிசாசினுடைய
கைக்கென்னைத் திரு ரத்தத்தாலே
விலக்கி நீங்கலாக்கின
ரட்சிப்புக்காக, என்றைக்கும்
என் ஆவி உம்மைப் போற்றவும்.
3. மெய்யாகத் தேற்றும் தேய்வ ஆவீ,
ஆ, உமக்குப் புகழ்ச்சியே;
உம்மாலே இந்தக் கெட்ட பாவி
இரட்சிப்புக்குள்ளானானே;
இங்கென்னில் நன்மை ஏதுண்டோ
அதுமது பயிர் அல்லோ!
4. இந்நேரமட்டும் நீர் ரட்சித்தீர்,
பலவித இக்கட்டிலே
எப்போதும் என்னை ஆதரித்தீர்,
கண்ணார அதைக் கண்டேனே;
மா மோசம் வந்தும், எனக்குச்
சந்தோஷ ஜோதித் தோன்றிற்று.
5. என் நாவு பேசும் நாள்மட்டாக
என் நெஞ்சையும்மட்டுக்கும்,
நான் உமதன்பைப் பூரிப்பாகத்
இஸ்தோத்திரிப்பேன் நித்தமும்;
என் வாய் ஓய்ந்தாலும் ஓய்ந்திரேன்,
என் உள்ளத்தாலே போற்றுவேன்.
6. நான் மண்ணில் பாடும் ஏழையான
துதியை ஏற்றுக் கொள்ளுமேன்;
நான் விண்ணில் தூதருக்கொப்பான
பிற்பாடு நன்றாய்ப் போற்றுவேன்;
அப்போ நான் வானோர் கும்புடன்
புதிய பாட்டாய்ப் பாடுவேன்.