Pokkisam Serthidungal – பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

Deal Score0
Deal Score0

பல்லவி

பொக்கிஷம் சேர்த்திடுங்கள்-பரத்திலே

அனுபல்லவி

பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்
மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம். – பொக்

சரணங்கள்

1. பொட்டும் அரிக்காதே,-அங்கே புழுப்
பூச்சி கெடுக்காதே;
துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே;
துருவும் பிடியாது, குறையாது, அழியாது. – பொக்

2. விண்ணுலகந் தன்னிலே-பொக்கிஷத்தை
விரும்பியே சேர்த்திடுவோர்
மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே;
மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே – பொக்

3. உங்கள் பொக்கிஷம் எங்கேயோ,-அங்கே உங்கள்
உள்ளமுமே யிருக்கும்,
இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே,
என்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை. – பொக்

4. ஜீவன் சுகத்துடனே-இருக்கையில்
ஆவலா யிப்பொழுதே,
தேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்
சேர்த்திடுவோர் மெத்தப் பாக்கியவான்களே. – பொக்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo