Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே
1. பூரண வாழ்க்கையே!
தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது!
2. பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்;
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.
3. அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே;
உருகும் அவர் நெஞ்சிலும்
நம் துன்பம் பாய்ந்ததே.
4. முள் தைத்த சிரசில்
நம் பாவம் சுமந்தார்;
நாம் தூயோராகத் தம் நெஞ்சில்
நம் ஆக்கினை ஏற்றார்.
5. எங்களை நேசித்தே,
எங்களுக்காய் மாண்டீர்;
ஆ, சர்வ பாவப் பலியே,
எங்கள் சகாயர் நீர்.
6. எத்துன்ப நாளுமே,
மா நியாயத்தீர்ப்பிலும்
உம் புண்ணியம், தூய மீட்பரே,
எங்கள் அடைக்கலம்.
7. இன்னும் உம் கிரியையை
எங்களில் செய்திடும்;
நீர் அன்பாய் ஈந்த கிருபைக்கே
என் அன்பு ஈடாகும்.