Pudhiya Aandu Thuvanga seithaar – புதிய ஆண்டு துவங்க செய்தார்
புதிய ஆண்டு துவங்க செய்தார்
புதிய காரியம் வாழ்வில் செய்வார்-2
விசுவாசமாய் இயேசுவை நம்பி
தொடர்ந்து முன்னேறுவோம்-2
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே-2
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்-2
1.போனதை நினைத்து புலம்பமாட்டேன்
புதிய காரியம் செய்திடுவார்-2
வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டி
வாழ்வில் வந்திட உதவி செய்வார்-2
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே-2
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே-2-அல்லேலூயா
2.தீங்கு என்னை தொடுவதில்லை
துஷ்டன் என் வழியாய் செல்வதில்லை-2
வாழ்நாள் எல்லாம் வல்லவர் சிறகால்
வழுவாமல் என்னை காத்திடுவார்-2
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே-2
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2-அல்லேலூயா