pudhusa pudham pudhusa – புதுசா புத்தம் புதுசா
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2
பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு)
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2
வாக்குத்தத்தம் தந்து விட்டார்
என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என் கண்களால் காண செய்தார்-புதுசா
1.கடந்த நாட்களில் கண்மணி போல்
காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2
புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார்
புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம்
2.வெட்கப்பட்ட இடங்களிலே
தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2
எதிரியின் கண்கள் முன்னே
விருந்தொன்றை வச்சாரய்யா
என் தலையை எண்ணையாலே
அபிஷேகம் செய்தாரையா-வாக்குத்தத்தம்