Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா

Deal Score0
Deal Score0

பல்லவி

இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா
பக்ஷமுடனே இரட்சகரண்டை ஓடி வா

சரணங்கள்

1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது
ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்
அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்
நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார்
நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி

5. பாவி உன்னை ஈடேற்றப் பரலோகம் விட்டாரே;
தாவியே நீ அவர் பாதந்தேடி ஓடி வா – இரட்சி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo