Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்

Deal Score+5
Deal Score+5

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம்

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம்
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா

மன்னனாம் மாப்பிள்ளை
பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா

புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா

கறை திறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேசமணாளன் மேல் தூவிடுவோம் – ரோஜா

Rojaappoo vaasa malarkal naam ippo
naesa mannaalar mael thooviduvom

mallikai mullai sivanthi pithchi
melliyar sernthu alliyae veesi
nal manamakkal meethu naam
ellaa malarum thooviduvom -roja

mannanaam maappillai
pannpulla pennnudan
antilum paedum pol ontiththu vaala
aanndavar aaseervathikka nam vennduthalodu thooviduvom -roja

puththira paakkiyam pukalum nalvaalvum
saththiyam saantham suththanal ithayam
niththiya jeevanum pettivar entum
pakthiyaay vaalnthida thooviduvom -roja

karai thiraiyatta manavaatti sabaiyai
iraivanaam Yesu thannudan serkkum
mangala naalai ennnniyae ippo
naesamannaalan mael thooviduvom -roja

https://www.worldtamilchristians.com/bayanthu-kartharin-paathaiyil-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo