Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே

Deal Score0
Deal Score0

பல்லவி

சந்தத மங்களம், மங்களமே!
சந்தத மங்களம், மங்களமே!

அனுபல்லவி

அந்தம் ஆதி இலான் அருள் சேயா,
எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத

சரணங்கள்

1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,
இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத

2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-து
உய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும், ஏக திரித்துவ தேவா – சந்தத

3. கர்த்தனே, கருணைக் கடலே, உயர் பெத்தலைப் பிரதாப விசேடா!
புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம் வைத்தே இவர்க் கருள் செய்திடும். – சந்தத

https://www.worldtamilchristians.com/gunam-ingeetha-vadivaai-lyrics-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo