Santhosam Venuma (சந்தோஷம் வேணுமா) | Tamil Christian Song | Jesus redeems
Santhosam Venuma (சந்தோஷம் வேணுமா) | Tamil Christian Song | Jesus redeems
Santhosam Venuma | Tamil Christian Song
—————————————————————————————————————————————-
Tamil Lyrics
சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே (2)
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) – சந்தோஷம்
பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே (2)
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்
கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே (2)
கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்
சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே (2)
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்
Tamil Christian songs lyrics