Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய்
1. சீர் ஆவியால் இரக்கமாய்
உண்டான வேதமே,
ஒப்பற்ற ஞானமுள்ளதாய்
நமக்குண்டாயிற்றே.
2. அதில் பிறக்கும் போதனை
விளக்கைப்போலவே,
நற்கதி சேரும் மார்க்கத்தை
விளக்கிக் காட்டுமே.
3. இருள் நிறைந்த பூமியில்
அதே என் வெளிச்சம்
பரத்தை நோக்கிப் போகையில்
அதே நட்சத்திரம்.
4. கர்த்தாவின் அருளால் அதே
மகா ஈவாயிற்று
அதைக்குறித்தென் நெஞ்சமே
சந்தோஷமாயிரு.