Siluvai Sumanthummai – சிலுவையை சுமந்தும்மை
சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே
இயேசுவே என்னையும் அழைத்தீரே
கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே
நல்லதோர் வழியை வகுத்தீரே
முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்
உந்தனின் திருப்பாதத்தில்
ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே
உம் சித்தம் நிறைவேற்றிடும்
1. நேசரே உம் அடிச் சுவடுகளை
நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே
இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல்
சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய்
2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே
வேகமாய் உம் அண்டை வந்திடுவேன்
ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மை
யுகயுகமாக சேவை செய்வேன் – முற்றுமா