
Siluvaiyil Araiyunda yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே
Siluvaiyil Araiyunda yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே
சிலுவையில் அறையுண்ட ஏசுவே
உம்மையே நோக்கி பார்க்கிறேன்
என் பாவ சுமைகளோடு
உம் பாத நிழலில் நிற்கின்றேன்
ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே
தந்தையே இவர்களை மன்னியும்
அறியாமல் செய்தார்கள் என்றீர்
மாறாத இரக்கத்தால் என்னை
மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே
ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே
அம்மா இதோ உம் மகன் என்றீர்
இதுவும் தாய் என்றே நேசத்தால்
அன்னையின் அன்பினில் நாளுமே
என்னையும் வாழ்ந்திட செய்யுமே
ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே
தாகமாய் உள்ளதே இறைவா
ஏன் என்னை கை விட்டீர் என்றீரே
கைவிடா நேசத்தால் எனக்கும்
பாவம் மாற்றும் ஜீவ நீரை தாருமே
ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே
தந்தையே உமது கையில்
என் ஆவியை ஒப்படைக்கின்றேன்
என்னையே உமது கரத்தில்
முற்றிலும் கையளிக்கின்றேன்
ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே