Siluvaiyil Searuvean – சிலுவையில் சேருவேன்
1. சிலுவையில் சேருவேன்
ஏழை ஈனன் குருடன்
லோகம் குப்பை என்கிறேன்
பூர்ண மீட்பு பெறுவேன்
பல்லவி
கர்த்தா! உம்மை நம்புவேன்
கல்வாரி பலியே நீர்!
சிலுவை யண்டை தாழ்வேன்
இப்போ இயேசே இரட்சிப்பீர்!
2. நெடும் வாஞ்சை உமக்காய்
ஆயின் ஆண்டது தீமை
இயேசு சொல்வார் இன்பமாய்
தீர்ப்பேன் முற்றாய் பாவத்தை – கர்த்தா
3. முற்றுமாய் படைக்கிறேன்
அன்பர் ஆஸ்தி சமயம்
ஆத்மா தேகம் அனைத்தும்
உமக்கே என்றைக்குமாய் – கர்த்தா
4. வாக்குத்தத்தம் நம்புவேன்
உணர்வேன் திரு இரத்தம்
மண்ணில் தாழ்ந்து விழுவேன்
அறையுண்டேன் கிறிஸ்தோடும் – கர்த்தா
5. சேர்வார் ஆத்மா நிறையும்!
அவரே என் பூரிப்பு
அடைந்தேன் சொஸ்தம் முற்றும்
ஆட்டுக் குட்டிக்கு மாண்பு! கர்த்தா