Siriyavanai puzhuthiyilirunthu – சிறியவனை புழுதியிலிருந்து
சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி விடுகின்றீர்
எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி மகிழ்கின்றனர்
ஆராயமுடியா பெரிய காரியங்கள் செய்பவரே
எண்ணிமுடியா அதிசயங்கள் செய்பவரே செய்பவரே
யாக்கோபென்னும் சிறுகூட்டமே பயப்படாதே
இஸ்ரவேலின் தேவன் உந்தன் நடுவிலிருக்கிறார்
உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே
உன்னை ஒருவராலும் பிரிக்க முடியாதே
யாக்கோபே உன் கூடாரங்கள் அழகானவை
இஸ்ரேல் உன் வாசஸ்தலங்கள் எத்தனை மேன்மை
அவை பரவிப்போகும் ஆற்றை போலவே
நதியோரத்திலுள்ள தோட்டத்தைப் போலவே
யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லை
இஸ்ரவேலுக்கெதிரான ஓர் குறியும் இல்லை
கன்மலை உச்சியிலிருந்து உன்னை கண்டேனே
கழுகைப்போல பெலனும் தந்தேனே