Suththa Iruthayathai Neer – சுத்த இருதயத்தை நீர்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
1.சுத்த இருதயத்தை நீர்,
கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்,
திட ஆவியை, தேவரீர்,
என் உள்ளத்தில் புதுப்பியும்
2.ஆ, உம்முடைய முகத்தை
விட்டென்னை நீர் தள்ளாமலும்,
என்னிடத்தில் தெய்வாவியை
பேர்த்தெடுக்காமலுமிரும்.
3.மீண்டும் உமதிரட்சிப்பின்
சந்தோஷத்தைத் தந்தருளும்;
இனிப் புதிய ஆவியின்
உற்சாகம் என்னைத் தாங்கவும்.