Tetelestai எல்லாம் முடிந்தது
Tetelestai எல்லாம் முடிந்தது
இயேசுவின் வெற்றிக்குரல் கேட்குதே
கல்வாரி சிலுவையில் வெற்றிகுரல் தொனிக்குதே
பாதாள சேனைகள் நடுங்குதே
நம் தேவன் வெற்றி சிறந்தார் (4)
எதிராய் இருந்த கையெழுத்தை
ஆணிகள் ஏற்று குலைத்தாரே
பிசாசின் அதிகாரம் முடிந்ததே
பிதாவின் பிள்ளைகள் ஆனோமே – நம் தேவன்
இரத்தம் சிந்தி விலை கொடுத்து
மீட்பை நமக்கு தந்தாரே
வியாதிகள் எல்லாம் மறைந்ததே
அவர் தழும்புகளால் குணமானோமே – நம் தேவன்