Thari Thazhmaiyae- தரி தாழ்மையே

Deal Score0
Deal Score0

தரி தாழ்மையே தெரிந்து வெறு
தாட்டிகமதை உரிந்து

சரணங்கள்

திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு
செயலதை நீ குறி மனமே – அவர்
தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த்
தாழ்ந்திருந்தார் அனுதினமே – தரி

மனத் தரித்திரர் தாம் பாக்கியர் எனவே
வாகுடன் அவர் உரைத்தாரே – நெஞ்சே
உனக்குள் இத்தகையான நற்குணமே
உண்டோ என்றாய்ந்து நீ பாரே – தரி

மேட்டிமை யுடையோர் மீது தற்பரனார்
வெறுப்படைந் தகற்றுவார் உடனே நல்ல
தாட்டிகமதிலாத் தாழ்ந்த சிந்தையினோர்
தமக்கருள் புரிகுவர் திடனே – தரி

ஆதியில் தூதர்களில் சிலர் கெர்வம்
அடைந்து நல் வாசமற்றாரே உடன்
தீதறு பேய்களால் எரிநகரில்
சேர்ந்ததி சாபமுற்றாரே – தரி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo