Thedi Thedi parkintrean -தேடி தேடி பார்க்கின்றேன் lyrics
தேடி தேடி பார்க்கின்றேன்
எனக்காய் துடிக்கும் ஒரு இதயம்
பார்த்து பார்த்து தோற்க்கின்றேன்
அப்படி எதுவும் இல்லையே (2)
என் தோல்வியில் தோழனாய்
எங்கும் தொடரும் தேவதையாய்
எந்த நிலையிலும் எனக்காய்
துடிக்கும் இதயம் தேடினேன்
எங்கும் இல்லை நிஜம் இல்லை
எங்கும் கானல் நீராய் போனதே
எங்கும் இல்லை நிஜம் இல்லை
என் கனவும் கலைந்ததே (2)
உலகம் என்று நினைத்த உறவு
உதறி விட்டு மறைந்த போது
உடலை பிரிந்த உயிரை போல ஏங்கினேன்
இதுவரை கிடைத்த அன்பு
இனி இல்லை என்ற போது
அடைப்பட்ட நீரைப் போல தேங்கினேன்
காயப்பட்ட இரு கரம்
என்னை கட்டி அணைத்ததே
அன்று கண்டேன் எனக்காய்
துடிக்கும் இதயத்தை ஓ (2)
இயேசுவே என் இயேசுவே
உம் அன்பு போதுமே
நேசமே என் பாசமே
நீர் மட்டும் போதுமே (2)
தேடி தேடி வந்ததே
எனக்காய் துடிக்கும் ஒரு இதயம்
பார்த்து பார்த்து நின்றதே
எனக்காய் தவிக்கும் ஒரு இதயம்
தேடி தேடி வந்ததே
உனக்காய் துடிக்கும் ஒரு இதயம்
பார்த்து பார்த்து நின்றதே
உனக்காய் தவிக்கும் ஒரு இதயம்
என் காயம் ஆற்றிட
என் வலிகள் தாங்கிட
எனக்காய் மரித்து
உயிர்த்த உண்மை காதலே
இயேசுவே என் இயேசுவே
உம் அன்பு போதுமே
நேசமே என் பாசமே
நீர் மட்டும் போதுமே (4)
உன் காயம் ஆற்றிட
உன் வலிகள் தாங்கிட
உனக்காய் மரித்து
உயிர்த்த உண்மை காதலே
இயேசுவே என் இயேசுவே
உம் அன்பு போதுமே
நேசமே என் பாசமே
நீர் மட்டும் போதுமே