Thirumbi Paarathae – திரும்பிப் பாராதே
திரும்பிப் பாராதே சோதோமைத்
திரும்பிப் பாராதே
அனுபல்லவி
விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு
வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு – திரு
சரணங்கள்
சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு – மாதர்
சந்தடி செய்யும் சீராட்டு
விந்தையான போரோட்டு மந்தை
வேடிக்கை என்று விட்டோட்டு – திரு
செல்வத்திலே மெத்தச் செருக்கு நீ
செய்வதெல்லாம் முழுத் திருக்கு
பல்வழி நீரோட்டப் பெருக்கு ஏன்
பண்ணுகிறாய் இந்த முறுக்கு – திரு
அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் உல
காசையினால் மெத்த தியங்கிறாய்
சங்கடத்துள்பட்டு மயங்கிறாய் வீண்
சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் – திரு
ஆண்டவர் யேசு சகாயமே உனக்
கடைக்கலம் ஐந்து காயம்
வேண்டிக் கொள்வது நேயம் கை
விடாதே இந்த உபாயம் – திரு