Thirupaatham searamal irupeno – திருப்பாதம் சேராமல்
திருப்பாதம் சேராமல் இருப்பேனோ – நான்
தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ
1.அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் – திருப்பாதம்
2.ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே – திருப்பாதம்
3.ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
தூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன் – திருப்பாதம்
4.உலையில் மெழுகுபோல் உருகுதென் நெஞ்சம்
அலையாகும் திருவடி வணங்கினேன் தஞ்சம் – திருப்பாதம்